கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், சூளகிரி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேற்று காலை 7 மணி நிலவரப்படி பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
ஊத்தங்கரை 19.4, சூளகிரி 18, தளி, ராயக்கோட்டை 15, போச்சம்பள்ளி 7.2, நெடுங்கல் 6.2, பெனுகொண்டாபுரம் 10.2, கிருஷ்ணகிரி 5.4, ஓசூர் 5.5, தேன்கனிக்கோட்டை 4.7, பாரூர் 5.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந் துள்ளது.
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 363 கனஅடியாக இருந்தது. அணையில் 50 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் ஆற்றிலும், வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாய்கள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 3.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. பாரூர் ஏரியின் மொத்த கொள்ளளவான 15.60 அடிக்கு தண்ணீர் உள்ளதால், ஏரிக்கு வரும் 36 கனஅடி தண்ணீரும், இணைப்பு ஏரிகளுக்கு கால்வாய்கள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago