ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியீடு டிசம்பர் 15-ம் தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, புதிய வாக்காளர் சேர்க்கை பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் மேற்கொள்வதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணி கள் மேற்கொள்ள வரும் 21 மற்றும் 22-ம் தேதியும், வரும் டிசம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை, வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று வாக்கா ளர் அடையாள அட்டை மட்டும் இல்லாதவர்கள் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க தேவை யில்லை. நகல் வாக்காளர் அடை யாள அட்டை பெற அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் 001சி படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்டார். மாவட்டத்தில் உள்ள5 சட்டப்பேரவை தொகுதிகளில் 6 லட்சத்து 109 ஆண்களும், 6 லட்சத்து 34 ஆயிரத்து 639 பெண்களும், 116 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 12 லட்சத்து 34 ஆயிரத்து 864 பேர் இடம் பெற்றுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 2 ஆயிரத்து 412 ஆண்களும், 6 லட்சத்து 36 ஆயிரத்து 926 பெண்களும், 115 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 12 லட்சத்து 39 ஆயிரத்து 453 பேர் இடம் பெற்றிருந்தனர். தொடர் சுருக்கத் திருத்த பணிகளால் 5 ஆயிரத்து 694 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் இறப்பு, இருமுறை பதிவு உள்ளிட்ட காரணங்களால் 10,283 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலுடன் நேற்று வெளியான பட்டியலை ஒப்பிடும்போது 2,303 ஆண்ளும், 2 ஆயிரத்து 287 பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களில் ஒரே ஒரு வாக்காளர் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 616 பிரத்யேக மையங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை வரும் டிசம்பர் 15-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளுக் கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று வெளியிட்டார். இந்தப் பட்டியலில் 4 லட்சத்து 90 ஆயிரத்து 93 ஆண் களும், 5 லட்சத்து 13 ஆயிரத்து 636 பெண்களும், 40 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 10 லட்சத்து 3 ஆயிரத்து 769 பேர் இடம் பெற்றுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை 593 மையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பத்தூர், ஜோலார் பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று வெளியிட்டார். இதில், ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களி டம், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறும்போது, ‘‘வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021-ம் ஆண்டுக்கான கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. திருப்பத் தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 4 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (நேற்று) வெளியிடப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி வரை இம்மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் 9 லட்சத்து 44 ஆயிரத்து 284 பேர். தற்போது, புதிதாக 4,255 பேர் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள னர்.

அதேநேரத்தில் 9,847 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 9 லட்சத்து 38 ஆயிரத்து 692 பேர் இடம் பெற்றுள்ளனர்’’ என்றார்.

திருவண்ணாமலை மாவட்டம்

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்கா ளர் பட்டியலை நேற்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட, கோட் டாட்சியர் தேவி பெற்றுக்கொண் டார். மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதி களில் 9,97,361 ஆண்களும், 10,32,596 பெண்களும், 93 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 20 லட்சத்து 30 ஆயிரத்து 50 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஜன.21-ல் இறுதி பட்டியல்

வரைவு வாக்காளர் பட்டியல் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். மேலும், விவரங்களுக்கு https://www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளலாம். 01-01-2021-ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு, சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி இன்று(16-ம் தேதி) முதல் நடைபெற உள்ளது. சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யும் பணி டிசம்பர் 15-ம் தேதி வரை நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 21-ம் தேதி வெளியிடப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்