கரோனா தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலாத் தலங்களுக்கு இ-பதிவு பெற்று செல்லுமாறு சுற்றுலாப் பயணிகளை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை தமிழக - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கியதையடுத்து, நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், உதகை தாவரவியல் பூங்கா,கர்நாடகா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காக்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள சிறப்பு பெற்ற பழங்குடியின மக்களின் தோடா விற்பனை நிலையம் கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை சுற்றுலாப் பயணிகள் கடைப்பிடிக்கிறார்களா என்பதைகண்காணிக்க 15 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தீபாவளி பண்டிகைதினத்தில், தோட்டக்கலைத் துறைகட்டுப்பாட்டில் உள்ள கல்லார் பழப்பண்ணைக்கு 705 சுற்றுலாப் பயணிகளும், காட்டேரிப் பூங்காவுக்கு 287, தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 269, உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு 3163, ரோஜா பூங்காவுக்கு 1294, குன்னூர்சிம்ஸ் பூங்காவுக்கு 859, மரவியல் பூங்காவுக்கு 76 என மொத்தம் 6653 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago