சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள் வெறிச்சோடி காணப்பட்ட திருப்பூர் மாநகர சாலைகள்

தீபாவளி பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் திருப்பூரில் முக்கிய சாலைகள் வெறிச்சோடிகாணப்பட்டன.

பின்னலாடை தொழில் நகரமானதிருப்பூரில் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நடைபெறுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 9 லட்சம்தொழிலாளர்கள் வேலை வாய்ப்புபெற்றுள்ளனர். சுமார் 6 லட்சம்தொழிலாளர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து, குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு, கடந்த 11-ம் தேதி முதலே, வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குசெல்லத் தொடங்கினர். இவர்கள் அனைவரும் நவம்பர் 18-ம் தேதிக்கு பிறகே திருப்பூர் திரும்ப வாய்ப்புள்ளதால், பெரும்பாலான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள்அதற்கு பிறகே திறக்கப்படும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் திருப்பூரில் நேற்று பிரதான சாலைகள், கடை வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வெளியூர் சென்ற தொழிலாளர்கள் திரும்பிய பிறகே, திருப்பூர் இயல்பு நிலைக்குதிரும்ப வாய்ப்புள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்