கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டி கையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் ரூ. 14 கோடியே 83 லட்சத்து 21 ஆயி ரத்து 570 ரூபாய்க்கு மதுபானங்கள் விற் பனையாகியுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் 144 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 13-ம் தேதி ரூ. 7 கோடியே 25 லட்சத்து 59 ஆயிரத்து 550-க்கு மதுபானங்கள் விற் பனையாகி உள்ளன. தீபாவளி அன்று (நவ.14) ரூ. 7 கோடியே 57 லட்சத்து 62 ஆயிரத்து 20-க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ. 14 கோடியே 83 லட்சத்து 21 ஆயிரத்து 570-க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளி அன்று (நவ. 6)மற்றும் அதற்கு முந்தைய நாள் நவம் பர் 5-ம் தேதி ஆகிய 2 நாட்களில் ரூ.10கோடியே 81 லட்சத்து 86 ஆயிரம்ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையா னது. கடந்தாண்டை விட இந்தாண்டு ரூ. 4 கோடியே 13 லட்சத்து 35 ஆயிரத்து 570-க்கு அதிகமாக மதுபானங்கள் விற் பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago