கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டம்

By செய்திப்பிரிவு

தீபாவளிக்கு போனஸ் வழங்கா ததைக் கண்டித்து வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன தொழிலாளர் களுக்கு 20 சதவீத போனஸ் வழங்காததைக் கண்டித்து தீபாவளியன்று தொழிலாளர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், நிறுவனம் முன் கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டமும் நடைபெற்றது.

போராட்டத்துக்கு அரசு உப்பு நிறுவன தொழிலாளர் சங்க (சிஐடியூ) தலைவர் கே.பச்சமால் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் குமர வடிவேல், முன்னாள் செயலாளர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கஞ்சித்தொட்டி திறப்பு போராட்டத்தைத் தொடங்கி வைத்து சிஐடியூ மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி பேசினார். நிர்வாகிகள் தனிராம்,பெருமாள், காட்டுராஜா மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE