திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டை கிராமத்தில் நடைபெற்று வரும் ரூ.1 கோடியே 73 ஆயிரம் மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் மற்றும் ரூ.2 கோடியே 69 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் அரசுப் பள்ளி கட்டிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரோனா காலத்தில் மக்கள் நல திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில், தமிழக முதல்வர் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் கூடுதலான வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முக்கிய அதிகாரிகள் உள்ளிட் டோருடன் தமிழக முதல்வர் ஆலோசித்து எடுத்துவரும் துரித நடவடிக்கைகளால், தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை உள்ளிட்டவற்றால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளிலிருந்து மக்களைப் பாது காக்கவும் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாஜகவினர், அவர்களின் கட்சி குறித்து உயர்வாகப் பேசுவதை, அதிமுகவை விமர்சனம் செய்வ தாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago