தஞ்சாவூர் - மயிலாடுதுறை இடையே ரயில்வே மின்பாதையில் சிறப்பு விரைவு ரயில்கள் நேற்று முன்தினம் முதல் இயக்கப்பட்டன.
மெயின் லைன் என்றழைக்கப் படும் தஞ்சாவூர் - கும்பகோணம் வழித்தடத்தில் மின் பாதை அமைக்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு கும்பகோணத்துக்கு வந்த மத்திய ரயில்வே அமைச்சரிடம் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 2018-ம் ஆண்டு இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கியது. இதில் முதல்கட்டமாக விழுப்புரம்-கடலூர் இடையேயும், அடுத்தக் கட்டமாக கடலூர்- மயிலாடுதுறை இடையேயும் பணிகள் முடிவடைந்தன.
இதன் தொடர்ச்சியாக மயிலாடு துறை - தஞ்சாவூர் இடையேயான 73 கி.மீ தொலைவுக்கு ரூ.320 கோடி மதிப்பீட்டில் 3-வது கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளன.
இதையடுத்து, அக்.15-ம் தேதி மயிலாடுதுறை-தஞ்சாவூர் இடையே ரயில் இன்ஜின் வெள்ளோட்டம் நடைபெற்றது. அதன் பிறகு சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, நவ.11-ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணை யர் அபய்குமார் ராய் தஞ்சாவூர்-மயிலாடுதுறை மின்பாதையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, இவ்வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள், அதன் இணைப்புகள், ரயில் நிலையங்களில் அமைக்கப் பட்டுள்ள மேம்பால நடை மேடை, டிராஃபிக் கன்ட்ரோல் ரூம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
அப்போது, மயிலாடுதுறை யிலிருந்து 8 பெட்டிகள் கொண்ட தனி ரயில் தஞ்சாவூருக்கு அதி வேகமாக இயக்கப்பட்டது. 100 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில் 42 நிமிடங்களில் தஞ்சாவூரை அடைந்தது.
அதன்பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மின்சார ரயிகளை இயக்க நவ.13-ம் தேதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மைசூர் - மயிலாடுதுறை ரயில், சோழன் விரைவு ரயில், ஜனசதாப்தி அதிவிரைவு ரயில், புவனேஸ்வர் - ராமேசுவரம் வாராந்திர ரயில் ஆகியவை நேற்று முன்தினம் மின் பாதையில் இயக்கப்பட்டன. தொடர்ந்து, இந்த வழித்தடமின்பாதையில் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வரு கின்றன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago