பாகாயம் - சஞ்சீவிபுரம் பகுதியில் நுழைவு வாயில் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாகாயம் - சஞ்சீவிபுரம் நுழைவு வாயிலை அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் நேற்று திறந்து வைத்தார்.

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த சஞ்சீவிபுரம் பகுதியில் ஐடாஸ்கடர் நினைவு வளையத்துடன் கூடிய நுழைவு வாயில் அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாரை சந்தித்த சஞ்சீவிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இது தொடர்பாக மனு ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, பொதுமக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் தனது சொந்த நிதியில் நினைவு வளையத்துடன் கூடிய நுழைவு வாயிலை கட்ட உத்தரவிட்டார். அதன்படி, ஐடாஸ்கடர் நுழைவு வாயில் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திமுக பகுதி செயலாளர் தங்கதுரை, கணியம்பாடி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் ஐடாஸ்கடர் நினைவு வளையத்துடன் கூடிய நுழைவு வாயிலை திறந்து வைத்தார்.

இதில், பாகாயம், சஞ்சீவிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு 40 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தந்த எம்எல்ஏ நந்தகுமாருக்கு நன்றி தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்