புதிதாக 126 பேருக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் ஒரே நாளில் நேற்று 126 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 33 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 43 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 24 பேர் என மொத்தம் 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு, மேலும் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 18,256-ஆக உயர்ந்துள்ளது. 17,651 பேர் குணமடைந்து வீடுதிரும்பி உள்ளனர். 336 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர். சிகிச்சை பலனின்றி 269 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்