குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகர காவல் துறையின் கீழ் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் சிறப்பாக பணிபுரியும் ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை அனைவரையும் குறிப்பிட்ட நாட்களில் காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில், திருப்பூர் மாநகரில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொலை, கொலை முயற்சி, சிறுமிகள் காணாமல் போனது, சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில், விரைவாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வது, கொள்ளை மற்றும் வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி வழக்குகளில் எதிரிகளை கண்டறிந்து களவு சொத்துகளை மீட்பது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுப்பது என சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

5 காவல் ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. துணை ஆணையர் க.சுரேஷ்குமார், பிற மாநகர காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்