திருப்பூரில் வீட்டில் பதுக்கப்பட்டரூ.11 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

வட மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு, விற்பனைக்காக திருப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான 580 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாநகரம் ஊரக காவல் எல்லைக்கு உட்பட்ட தாராபுரம் சாலைபுது ரோடு பகுதியில் இருந்து, கடைகளுக்கு விற்பனைக்காக தடை செய்யப்பட்டபுகையிலை பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், உரிய நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்பேரில், துணை ஆணையர் க.சுரேஷ்குமார் மேற்பார்வையில் தனிப் படை அமைத்து விசாரிக்கப்பட்டது.

இதில், புது ரோடு மருதமலை ஆண்டவர் நகர் மில்காரம்மா காம்பவுண்ட் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அதிரடியாக வீட்டுக்குள் சென்று மூட்டைகளாகவும், பெட்டிகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11.6 லட்சம் மதிப்புள்ள 580 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், விற்பனைக் காக புகையிலை பொருட்களை பதுக்கிவைத்திருந்த திருப்பூர் - மங்கலம் சாலை ஆண்டிபாளையம் குளத்துப்புதூரை சேர்ந்த வி.சுரேந்தர் (39), கல்லூரி சாலைமாஸ்கோ நகர் காமாட்சிபுரத்தை சேர்ந்தஆறுமுகராஜ் (39), புதுரோடு சீனிவாசாநகரை சேர்ந்த கே.சுரேஷ்குமார் (42) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சரக்கு வேன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்