தீபாவளியை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் நேற்று ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
குந்தாரப்பள்ளியில் வாரம் தோறும் வெள்ளிக் கிழமையில் வாரச் சந்தை கூடும். இந்த சந்தையில் அதிகாலையில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனையும், அதைத் தொடர்ந்து பகல் முழுக்க மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் நடக்கும். நேற்று கூடிய வாரச் சந்தை தீபாவளியை ஒட்டி அமைந்ததால் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி, ஆந்திரா, கர்நாடகா மாநில பகுதிகளில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
ஆடுகளை வாங்கிச் செல்ல வரும் வியாபாரிகளும், கிராம மக்களும், விவசாயிகளும், இறைச்சிக் கடைக்காரர்களும் குறைந்த அளவிலேயே வருகை தந்திருந்தனர். இதனால் ஆடுகளின் விலையும் எதிர்பார்த்த அளவில் இல்லை என ஆடு வளர்ப்போர் கூறினர். ஆடுகளின் எடைக்கு ஏற்ப ரூ.4000 முதல் ரூ.25 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்பட்டன. நேற்று சந்தையில் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடந்திருக்கும்.
இருப்பினும், கரோனா தொற்று பரவலின் எதிரொலியாக பொருளாதார முடக்கம் போன்ற காரணங்களால் ஆடுகளின் தேவை குறைந்ததாலேயே விற்பனையில் மந்த நிலை நிலவியதாக வியாபாரிகள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago