கரூரில் மல்லிகைப் பூ கிலோ ரூ.2,000

By செய்திப்பிரிவு

கரூரில் பூ வியாபாரிகள் சேர்ந்து நடத்தி வரும் பூச் சந்தையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மல்லிகை, ஜாதிப்பூ, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களை விற்பனை செய்து வருகின்றனர்.

கரூர் மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் கரூர் பூச் சந்தைக்கு பூக்கள் கொண்டு வரப்படும். தீபாவளி பண்டிகையையொட்டி கரூர் பூச் சந்தையில் கடந்த 2 நாட்களாக பூக்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று அதிகபட்சமாக மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு ஏலம் போனது. முல்லை ரூ.1,500-க்கும், ஜாதிப்பூ ரூ.800-க்கும் ஏலம் போனது.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கீரமங்கலம், வடகாடு, மாங்காடு போன்ற கமிஷன் மண்டிகளில் மல்லிகை, முல்லை மலர்கள் கிலோ ரூ.1,000-க்கு கொள்முதல் செய்யப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்