சுந்தரனார் பல்கலை பாடத்திட்டத்திலிருந்து அருந்ததிராய் புத்தகம் நீக்கத்துக்கு வைகோ கண்டனம்

By செய்திப்பிரிவு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

“வாக்கிங் வித் காம்ரேட்” என்ற புத்தகம் எழுத்தாளர் அருந்ததிராய் மத்திய இந்தியாவின் காடுகளிலுள்ள ஆயுதப் போராட்ட குழுவினரைச் சந்தித்தநிகழ்வுகளை விளக்கி பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதியது. இதைமனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழக ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இடம்பெறச்செய்திருந்தனர். இந்த பாடத்தைநீக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்ஸின் மாணவர் பிரிவான அகில இந்திய வித்தியார்த்தி பரிஷத் துணைவேந்தரிடம் கோரியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம் எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தகத்தை நீக்கிவிட்டு, வேறு ஒரு பாடத்தை வைத்துள்ளனர்.

ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர் உரிமைகள் நசுக்கப்படுவதையும், நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதையும் அருந்ததிராய் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து அவரது புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எஸ்டிபிஐ

எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியல் ரீதியாக கொடுக்கப்படும் நெருக்கடிகளுக்கு அடிபணிந்து பாடத்திட்டத்தை முடிவு செய்தால், சமூக நீதியும், நாட்டின்பன்முகத் தன்மையும் கேள்விக்குறியாகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்