கணக்கில் வராத பணம் பறிமுதல்: அவிநாசி வட்டாட்சியர் மீது வழக்கு

அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.60 ஆயிரத்து 510 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், வட்டாட்சியர் மீது ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றங்கள் நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் மாவட்ட ஊழல் தடுப்புமற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு வரை சோதனையில்ஈடுபட்டனர்.

இதில், கணக்கில் வராத ரூ.60 ஆயிரத்து 510 பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு ,அவிநாசி வட்டாட்சியராக இருந்த ஜி.சாந்தி மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்