குற்றங்களை தடுக்கமக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரம்

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையையொட்டி, மக்கள் திரளும் பகுதிகளில் குற்றங்கள் ஏற்படாமல் தடுக்க, நீலகிரி மாவட்டத்தில் கண்காணிப்பு பணியில் 150 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், செயின் பறிப்பு,புத்தாடைகளை திருடி செல்லுதல்,வாடிக்கையாளர்கள்போல கடைகளில்ஆடைகள் மற்றும் பொருட்களை திருடி செல்லுதல் உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கவும், இதுபோன்ற சம்பவங்களில்ஈடுபடுபவர்களை பிடிக்கவும் மாவட்ட காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "நீலகிரி மாவட்டம் முழுவதும் 150 காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர அனைத்து உட்கோட்டங்களிலும், சீருடை அணியாத காவல்துறை யினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். உதகை கமர்சியல் சாலை, மார்க்கெட்ஆகிய பகுதிகளிலும், கூடலூர் பஜார் பகுதியிலும், குன்னூர் மார்க்கெட் மற்றும்பேருந்து நிலையப் பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீருடை அணியாத ஆண், பெண் போலீஸார், மாவட்டம் முழுவதும் உள்ள மார்க்கெட், கடை வீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், பொருட்கள் மற்றும் பணப்பைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் ஒலிப்பெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்