திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளதாவது:
தற்போது சம்பா பருவத்தில் 51 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்யாமல் செயற்கையாக உரப் பற்றாக்குறையை ஏற்படுத்துவது, கூடுதல் விலைக்கு விற்பது, விவசாயிகள் அல்லாதோருக்கு விற்பது, ஒரு நபருக்கு அதிக அளவில் விற்பது மற்றும் தகுதியற்றோரின் ஆதார் எண்களை பட்டியலிடுவது போன்ற தவறுகளில் ஈடுபடும் உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
ஆகவே, விவசாயிகள் உரம் தொடர்பான புகார்களை, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago