கடலூரில் உள்ள தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் நேற்று ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள பல்வேறு நிறுவனங்களிடமிருந்து சன்மானம் பெறுவதாக புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் அருகில் உள்ளதுணை இயக்குநர் அலுவலகத்தில் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும்கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பிமெல்வின் ராஜாசிங் தலைமையி லான போலீஸார் நேற்று மாலை யில் திடீரென சோதனை நடத் தினர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இச்சோதனை யில் கணக்கில் வராத பணம் ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அலுவலக ஊழியர்கள் மற்றும் இணை, துணை இயக்குநர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago