அய்யலூர் சந்தையில் ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை வரத்து அதிகரிப்பால் விலை கிடைக்கவில்லை

By செய்திப்பிரிவு

அய்யலூர் ஆட்டுச் சந்தையில் ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. ஆடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததால் போதிய விலை கிடைக்கவில்லை.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வியாழன்தோறும் நடக்கும் ஆட்டுச்சந்தை மிகவும் பிரபலம்.

மாவட்ட எல்லையில் அய்யலூர் அமைந்துள்ளதால், இந்த ஆட்டுச்சந்தைக்கு திருச்சி, கரூர், புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோரும் ஆடுகளை விற்கவும், வாங்கவும் வருகின்றனர். இங்கு வாரத்துக்கு சராசரியாக ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகும். இந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு நேற்று கூடிய சந்தையில் அதிகபட்சமாக ரூ.2.50 கோடி வரை ஆடுகள் விற்பனையானது. இறைச்சி வியாபாரிகள் அதிக அளவில் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

சந்தைக்கு ஆடுகள் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால் போதிய விலை கிடைக்கவில்லை.

ஐந்தாயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனைக்கு வந்தநிலையில் நான்காயிரம் ஆடுகள்தான் நேற்று சந்தையில் விற்பனையானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்