தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள குருப் பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும், பூஜைப் பொருட்கள் கொண்டு செல்லவும், அர்ச்சனை செய்யவும் அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திட்டை யில் உள்ள குரு ஸ்தலமான வசிஷ்டேஸ்வரர் கோயிலில் வரும் 15-ம் தேதி நடைபெற வுள்ள குருப் பெயர்ச்சி விழா முன்னேற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குருப் பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். வெப்பமானி மூலம் பரிசோதனை செய்துகொள் வதுடன், கைகளை சானிடைசர் மூலம் சுத்தப்படுத்திக்கொண்ட பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தற்காலிக மருத்துவ முகாமில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவ பணியாளர்கள், சுகா தார அலுவலர்கள் சுழற்சி முறை யில் பணியமர்த்தப்பட உள்ளனர். தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதி செய்ய அறிவுறுத்தப்பட் டுள்ளது.
குடிநீர் வசதி, கோயிலின் சுற்றுப்புறங்களில் தற்காலிக கழிப் பறைகள் அமைப்பது உள்ளிட்ட பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிக ளையும் கோயில் நிர்வாகமும், உள்ளாட்சித் துறையினரும் மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் காவலர்களை பாது காப்பு பணியில் ஈடுபடுத்த வும் கோயில் வளாகம் மற் றும் வெளிப்புறங்களில் கண்கா ணிப்பு கேமராக்கள் உதவியுடன் கண்காணிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பூஜைப் பொருட்கள் கொண்டு செல்லவும், அர்ச்சனை செய்யவும் அனுமதி கிடையாது என்றார்.
ஆய்வின்போது கோட்டாட்சியர் வேலுமணி, இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணை யர் கிருஷ்ணன், கோயில் செயல் அலுவலர் தனலட்சுமி, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago