நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் களை ஒரே நேரத்தில் இடமாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் பெண் ஆட்சியராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து பொறுப்பு வகித்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதில், தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் வி.விஷ்ணு திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப் பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே, சேரன்மகாதேவியில் சார் ஆட்சியராகவும், கன்னியாகுமரி மாவட்டம் இனயம் துறைமுகத்தை உருவாக்குவதற்கான சிறப்பு அலுவலராகவும் பணிபுரிந்தவர்.

தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்திலி ருந்து பிரிக்கப்பட்டு, தென்காசி மாவட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 22-ம் தேதி உருவாக்கப்பட்டது. அதுமுதல், தென்காசி மாவட்ட முதல் ஆட்சியராகவும், அதற்கு முன் சிறப்பு அலுவலராகவும் பொறுப்பு வகித்த ஜி.கே.அருண்சுந்தர் தயாளன் மாற்றப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக, மீன்வளத்துறை இயக்குநராக இருந்த டாக்டர் எஸ். சமீரான் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரத்தை அடுத்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் தற்போது சந்தீப் நந்தூரி மாற்றப்பட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப் பட்டு ள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக டாக்டர் கே.செந்தில்ராஜ் நியமிக்கப் பட்டுள்ளார். தேசிய சுகாதார இயக்க இயக்குநராக இவர் பொறுப்பு வகித்துவந்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை யொட்டி பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில், இந்த 3 மாவட்ட ஆட்சியர்களும் மாற்றப்பட்டதாக தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்