தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தால் ஊதிய நிலுவைத்தொகை வழங்க உத்தரவு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் ஊதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், இதனை உடன் வழங்க அதிகாரி உறுதியளித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் சுய உதவிக்குழு மூலம் பணி செய்யும் தூய்மைத் தொழிலாளர்களுக்கு, கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாத காலத்துக்கு வழங்க வேண்டிய ஊதியம் நிலுவையில் உள்ளது. இத்தொகையை உடனடியாக வழங்கக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பாக, தூய்மைத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் தலைமை வகித்தார். சங்கத்தின் கவுரவத் தலைவர் வரகுணன், மாவட்ட துணைச் செயலாளர் வண்ணமுத்து, மாநகர பொறுப்பாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுடன், மாநகராட்சி சுகாதார அலுவலர் சரோஜா பேச்சுவார்த்தை நடத்தினார். `5 மாத நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்படும்’ என, அவர் உறுதி அளித்தார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்