தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், மார்க்கெட் பகுதி களில் பொருட்களை வாங்க பொது மக்கள் குவிந்து வருகின்றனர். கரோனா பரவல் அச்சம் இருந்தா லும் பெரும் பாலானவர்கள் முகக் கவசம் அணிந்து பொருட் களை வாங்கிச் செல்கின்றனர்.
அதேபோல், கரோனா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிளையும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நடத்தி வருகின்றனர்.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை வார இறுதி நாளில் வருவதால் பலர் சொந்த ஊர் களுக்கு வாகனங்களில் திரும்பு கின்றனர். இதனால், முக்கிய சாலைகளில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், மார்க்கெட் பகுதி களில் புதுத்துணிகள், இனிப்பு, புதுப்பானை, பழங்கள், பூஜை பொருட்கள் வாங்க ஏராளமானவர் கள் குவிந்துள்ளனர். கூட் டத்தை கட்டுப்படுத்தும் பணியில்காவல் துறையினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் வேலூர் மண்டித் தெரு, கிருபானந்த வாரியார் சாலை, வாணியம்பாடி சி.எல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், முக்கிய சாலைகளில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் காவல் துறையினர் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago