திருவள்ளூர் மாவட்டத்தில் 3 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம் தொடக்கம்

ஆட்டுக்கொல்லி என்னும் வைரஸ் நோய் தாக்கிய ஆடுகளுக்கு காய்ச்சல், இருமல், சளி, கழிச்சல், கருச்சிதைவு முதலான அறிகுறிகள் தென்படும். நோய்த் தாக்கப்பட்ட வெள்ளாடுகளில் 80, செம்மறி ஆடுகளில் 10 சதவீதம் வரை இறந்துபோகும் நிலை உள்ளது.

இம்மாவட்டத்தில் இந்நோயை தடுக்க, ஆட்டுக் கொல்லி நோய்த் தடுப்புத் திட்டத்தின்கீழ், 3 லட்சம் ஆடுகளுக்கான ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் முகாம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 21 நாட்களில் இதை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, மாவட்டத்தில் ஆடுகளை வளர்ப்போர், தங்களது கிராமத்தில் தடுப்பூசி போடப்படும் தினத்தில் அனைத்து ஆடுகளுக்கும் தடுப்பூசி போட்டு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என, ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்