திருவள்ளூர் மாவட்ட காவல் துறைவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இம்மாவட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும், அந்நியர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் 4,607 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் கடை வீதிகளுக்குவரும்போதும், வீட்டுக்குத் திரும்பும்போதும் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக எடுத்துச்செல்ல வேண்டும்.தீபாவளிக்காக வெளியூர் செல்வோர்தங்கள் வீடுகளை பாதுகாத்திட தங்கள் விவரங்களை காவல் நிலையங்களில் தெரிவித்துச் செல்லவேண்டும்.
இந்த ஆண்டு வரப்பெற்ற 19 விண்ணப்பங்களில் 16 பேருக்கு பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் நிரந்தர அனுமதி பெற்று, பல பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன.
பொதுமக்கள் அரசு அனுமதிபெற்று இயங்கும் பட்டாசு கடைகளில்பட்டாசுகளை வாங்கி பாதுகாப்பானமுறையில் தீபாவளியை கொண்டாடவேண்டும் என, திருவள்ளூர் எஸ்பிஅரவிந்தன் அறிவுறுத்தியுள்ளதாக அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago