இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று மாலை விழுப்புரத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநில பொது செயலாளரும் கடையநல்லூர் எம்எல்ஏவுமான முகமது அபுபக்கர் செய்தி யாளர்களிடம் கூறியது:
இந்திய யூனியன் முஸ்லீக்கின் மாநில மாநாடு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர முடிவெடுத்துள்ளோம்.
பாஜகவின் 6 வருட ஆட்சியில் தமிழகம் பல்வேறு உரிமைகளை இழந்துள்ளது. சிறுபான்மை சமூகத்தை குறிப்பாக முஸ்லீம் சமூகத்தை குறி வைத்து சட்டரீதியாகவும், அரசின் அதிகாரத்தை பயன்படுத்தியும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பாஜகவிடம் சரண்டைந்த அதிமுகவால் நம் உரிமைகளை இழந்து வருகிறோம். ஆளும் அதிமுக கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் பல்வேறு முறைகேடுகள் மூலம் ஊழல் செய்து வருகிறது. கரோனா காலத்திலும் ஊழல் நடந்துள்ளதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதால் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago