சொட்டுநீர் பாசனத்தில் நீர் சிக்கனம் விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

By செய்திப்பிரிவு

மத்தூர் அருகே விவசாயிகளுக் கான ராபி பருவகால பயிற்சி முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வட்டாரம் கனிச்சி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் 2020-21-ம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான ராபி பருவகால பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் சிவந்தி முன்னிலை வகித்து, வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் குறித்து பேசினார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட ஆலோசகர் பரசுராமன், ராபி பருவக்கால பயிற்சிக்கான தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.

வேளாண்மை அலுவலர் நீலகண்டன், துவரை மற்றும் பயறு வகை பயிர்கள் பூக்கும் தருவாயில் 2 சதவீதம் டிஏபி தெளிப்பு குறித்து விளக்கம் அளித்தார். துணை வேளாண்மை அலுவலர் சீனிவாசன், சொட்டு நீர் பாசனத்தில் நீர் சிக்கனம் மற்றும் அவற்றை அமைக்க தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கம் அளித்தார். பயிற்சி முகாம் ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலர்கள் கோவிந்தசாமி, ஹரிஷ் ஆகியோர் செய்தனர்.

உதவி தொழில்நுட்ப மேலாளர் ஹேமந்த் உட்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்