தென்காசி மாவட்டம் சிவசைலத்தில் உள்ள அவ்வை ஆசிரமத்தில் அரசு ஆயுர்வேதா பிரிவு மற்றும் செங்கோட்டை ரோட்டரி கிளப் சார்பில் ஐந்தாவது தேசிய ஆயுர்வேத தின விழா கொண்டாடப்பட்டது. மூலிகைகளின் படவிளக்க கண்காட்சி, உள்ளூரில் கிடைக்கும் மூலிகைகளின் கண்காட்சி ஆகியவற்றை குழந்தைகள் மற்றும் உள்ளூர் மக்கள் பார்வையிட்டனர்.
துணை ஆட்சியர் பிர்தவுஸ் பாத்திமா, தென்காசி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா, செங்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் நாதன், செங்கோட்டை அரசு மருத்துவமனை ஆயுர்வேத பிரிவு மருத்துவர் ஹரிஹரன், ஆசிரம துணைத் தாளாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆசிரம வளாகத்தில் பராமரிக்கப்படும் அத்ரி மூலிகை வனத்தில் மூலிகைச் செடிகள் நடப்பட்டன. டாக்டர் சவுந்தரம் சிறப்பு பள்ளிக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடிய உணவுப் பொருட்கள் ரெடிங்டன் பவுண்டேசன் மூலம் வழங்கப்பட்டன. பாரம்பரிய இனிப்பு வகைகளை ரோட்டரி சங்கத்தினர் வழங் கினர். ஆயுர்வேத மருத்துவக் குழுவினரால் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
காந்திகிராம லெட்சுமி சேவா சங்க சித்தா ஆயுர்வேதா உற்பத்தி அலகின் முதன்மை மேலாளர் கார்த்திகேயன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் உளவியலாளர் பாலமுருகன், செங்கோட்டை அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் கலா, ஆசிரம செயலாளர் செல்வி ரங்கம் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago