மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும், துணி வும் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் மகளிர் விடுதி மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு மையத்தை தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘மாணவர் களுக்கு தன்னம்பிக்கையுடன், துணிவுஇருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக் கலாம். மன அழுத்தம் மாணவர்களுக்கு இருக்கக்கூடாது. வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும். தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை மாணவர்கள் அர்ப்பணிப் போடு செயல்படுத்த வேண்டும்’’ என்றார்.
விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘அனைவரும் உயர் கல்வி பயில அரசு வழிவகை செய்ய வேண்டும். குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு கட்டாய மாக இலவச கல்வி வழங்க வேண்டும். இதன் மூலம் குழந்தை திருமணத்தை தடுக்க முடியும்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் சிறந்த தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பெயர்கள் மாணவர்களின் விடுதிக்கு வைக்கப்படுகிறது. அதற்கு காரணம், மாணவர்கள் அவர்களைப்போல வாழ்க்கை யில் உயர வேண்டும் என்பதற்காகத்தான். தற்போது கூட வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை சந்தித்து வெற்றிபெற்ற விஞ்ஞானி ‘மேரிகியூரி’ மற்றும் ‘டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி’ பெயர்களை இன்று (நேற்று) புதிதாக திறக்கப்பட்ட மாணவிகள் விடுதிக்கு வைக்கப்படுகிறது” என்றார்.
இந்நிகழ்ச்சியில், விஐடி துணைத்தலை வர் சங்கர் விசுவநாதன், உதவி துணைத் தலைவர் காதம்பரி ச.விசுவநாதன், துணை வேந்தர் டாக்டர் ராம்பாபு கொடாளி, இணை - துணை வேந்தர் டாக்டர்.எஸ். நாராயணன், பதிவாளர் சத்யநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago