திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் செயல்படும் நியூ தெய்வாசிட்டி ஹேர் ஆர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில், நடப்பாண்டு தீபாவளியை ஒட்டி திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேற்று இலவசமாக முடிதிருத்தம் செய்து, புத்தாடை அணிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அமைப்பின் நிறுவனர் தெய்வராஜ் கூறும்போது, "கடந்த 20 ஆண்டுகளாக ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் இல்லங்களிலுள்ள குழந்தைகள் என பல்வேறு தரப்பினருக்கு இலவசமாக முடி திருத்தம் செய்து வருகிறோம்.
அதன் ஒருபகுதியாக, தீபாவளி பண்டிகையையொட்டி, அறக்கட்டளை செயலாளர் சிவகாமி, உறுப்பினர்கள் சண்முகராஜ், செல்வராஜ், கோமதி, பிரேம்குமார், சுந்தர்ராஜ், ஜோதி, தேன்மொழி, ரமேஷ் பட்டேல் ஆகியோர்நேற்று காலை 7 முதல் மாலை 4 மணி வரை திருப்பூர் மற்றும் அவிநாசி சாலைகளில் சுற்றித்திரிந்த 70 பேருக்கு முடிதிருத்தம் செய்து, அவர்களை தூய்மைப்படுத்தி புத்தாடை மற்றும் ஒரு வேளை உணவு வழங்கினர்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago