தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூர் வந்த முதல்வரை சந்தித்து விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க இருந்தநிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது கண்டனத்துக்குரியது.
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ள நல்லாறு அணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இதனால், மேல்நீராற்றிலிருத்து பிரதான பாசனஅணையானதிருமூர்த்தி அணைக்கு ஆறு மணி நேரத்தில்தண்ணீர் வந்து சேரும். குறிப்பாக, இந்த ஆண்டும் மேல்நீராறு அணையிலிருந்து உபரியாக 9 டிஎம்சி தண்ணீர் சென்றுள்ளது.
ஆனால், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீர் பாசனத்துக்கு கிடைக்கும் என்ற நிலையில், அதுவும் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்துவிட்டது. எனவே, பிஏபி ஒப்பந்தத்தில் உள்ளபடி நல்லாறு அணையை அமைக்க வேண்டும் மற்றும் நீரைத்தேக்கி வைக்க பயன்படும் ஆனைமலை அணை அமைக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் வடக்கு பகுதியில்ஏற்கெனவே திட்டமிடப்பட்டு விடுபட்டுள்ள பல்வேறு குளம், குட்டைகளை, உடனடியாக அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் இணைக்க வேண்டும். அமராவதி ஆறு - உப்பாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்மேற்கண்ட கோரிக்கைகளை மனுவாக எழுதி, தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago