தஞ்சாவூர் கலைக்கூடம் 230 நாட்களுக்குப் பின் பொதுமக்கள் பார்வைக்காக நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.
கரோனா பரவலை தடுப்ப தற்காக நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. பொது முடக்கத்தில் மத்திய அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து, அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், திரையரங்குகள் நவ.10 -ம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடம் 230 நாட்களுக்குப் பின் பொதுமக்கள் பார்வைக்காக நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால், நேற்று குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களே வந்திருந்தனர். முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவர்களது கைளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்பட்டது.
இதே வளாகத்தில் உள்ள சரசுவதி மகால் நூலக அருங்காட்சியகம், மாவட்ட ஆட்சியரின் அனுமதிக்குப் பின் ஓரிரு நாட்களில் திறக்கப்படும் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago