கரோனா ஊரடங்குக்கு பிறகு நேற்று திரையரங்குகள் திறக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக பல்வேறு ஊர்களில் திரையரங்குகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டன. மேலும், இருக்கைகள் போதிய இடை வெளியுடன் மாற்றி அமைக் கப்பட்டன.
இந்நிலையில் தஞ்சாவூர், கும்பகோணத்தில் உள்ள தலா 5 திரையரங்குகளும் நேற்று திறக்கப்படவில்லை. புதிய படங்கள் இல்லாததால், பழைய படங்களை திரும்ப ஒளிபரப்பும்போது ஊழியர் சம்பளம், மின் கட்டணம், பராமரிப்பு செலவுகளுக்கு கூட வசூலாகாது என்பதால் திரையரங்குகளை திறக்கவில்லை என்றும், தீபாவளி முதல் (நவ.14) திறக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, கரூர், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள திரையரங்குகளும் நேற்று திறக்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago