ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா காந்திமதி அம்மன் - சுவாமி நெல்லையப்பர் காட்சி மண்டபத்தில் எழுந்தருளல்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி காந்திமதி அம்மன் உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக் கோயிலில் ஐப்பசி திருக் கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காட்சி மண்டபத்தில் அம்மன் எழுந்தருளும் வைபவம் நேற்று நடைபெற்றது.

இத்திருவிழா கடந்த 31-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கிநடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வருகிறது.

காந்திமதி அம்மன் தங்கச்சப்பரத்தில் டவுன் காட்சி மண்டபத்தில் எழுந்தருளும் வைபவம்நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் காட்சி மண்டபம்சென்றடைந்தார். தொடர்ந்து, சுவாமியை அம்மன் 3 முறை வலம்வந்தார். பின்னர் இருவரும் பக்த்ரகளுக்கு திருக்காட்சி அருளினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து திரிபுரசுந்தரியம்மன் கோயில் அருகேதிருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் வைபவம் நடைபெற்றது. இன்று அதிகாலை4 மணிக்கு கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி- அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்