தமிழகத்தில் புதிதாக 2,146 பேர் கரோனா வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்டனர். முதிய வர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி யர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பு தொடர் பாக சுகாதாரத் துறை வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று 2,146 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டனர். இதன்மூலம் தமிழ கத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 48,225 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 7 லட்சத்து 18,129 பேர் குண மடைந்துள்ளனர். 18,709 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் முதியவர் கள் உட்பட 16 பேர், தனியார் மருத்துவமனைகளில் 9 பேர் என நேற்று 25 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி 7-ம் தேதி முதல் கரோனா தொற்றால்அரசு பொது மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வும் மருத்துவமனை டீன் தேரணிராஜன் தெரிவித்துள் ளார்
இதனிடையே கள்ளக் குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு வுக்கு கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு இருந்தது. நேற்று முன்தினம் கரோனா பரிசோதனை செய்ததில் அவ ருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து கள்ளக் குறிச்சி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் காஞ்சிபுரம் மற்றும்செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ் வரிக்கு காய்ச்சல் இருந்ததால் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், அவருக்கு தொற்றுஉறுதியானது. பின் னர், அவர் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்ஜான் லூயிஸுக்கு காய்ச்சல் இருந்ததால், அவ ரும் கரோனா பரிசோதனை செய்தார். இதில், அவருக்கும் தொற்று உறுதியானது. இதை யடுத்து, அவர் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago