அரடாப்பட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முது நிலை எழுத்தரை தாக்கிய சங்கத் தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முதுநிலை எழுத்தராக பணியாற்றி வருபவர் மணி. இவர், வெறையூர் காவல் நிலையத்தில் நேற்று அளித்துள்ள புகார் மனுவில், “அரடாப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கத்தில் முதுநிலை எழுத்தராக கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.
இந்நிலையில், சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் பவித்தம் கிராமத்தில் வசிக்கும் தலைவர் வள்ளி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு, தலைவர் வள்ளியின் கணவ ரான அரசுப் பேருந்து நடத்துநர்ராஜா என்பவர், பணியில் இருந்த என்னிடம் வந்து, பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்கள் வழங்கும் போது தலா ரூ.2 ஆயி ரம் வழங்க வேண்டும் என மிரட் டினார். இதற்கு நான் மறுக்கவே, என்னை தாக்கினார். எனவே, ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கூட்டுறவு சங்க முதுநிலை எழுத்தர் மீது தாக் குதல் நடத்திய சங்கத் தலைவரின்கணவர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூட்டுறவு சங்கத்தின் முன்பு நேற்று கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago