3 நாட்களுக்கு பழைய படங்களை திரையிடுவதால் திரையரங்குகளில் கட்டணம் குறைப்பு தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாக வாய்ப்பு

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே ஒரு திரையரங்கம் திறக்கப்பட்ட நிலையில், இன்று திறக்கப்பட உள்ள திரையரங்குகளில் 3 நாட் களுக்கு கட்டணம் குறைத்துள் ளனர். அதேபோல், வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் முதல் நாளிலேயே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் நவம் பர் 10-ம் தேதி முதல் திரை யரங்குகள் திறக்க அரசு அனுமதி அளித்தது. 238 நாட்களுக்குப் பிறகு திரை யரங்குகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் திரையரங்குகள் திறப்பதில் உரிமை யாளர்கள் ஆர்வம் காட்டவில்லை.

ஒருங்கிணைந்த வேலூர்மாவட்டம் மற்றும் திருவண்ணா மலை மாவட்டங்களில் உள்ள 89 திரையரங்குகளில் நேற்று வேலூரில் உள்ள பி.வி.ஆர் வெலாசிட்டி திரையரங்கில் மட்டும் திரைப்படம் வெளியிடப்பட்டது. 50 சதவீதம் இருக்கைகளுடன் ரசிகர்கள் திரைப்படத்தை பார்த்தனர். முன்னதாக, திரையரங்க நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேனர் மூலமாக காய்ச்சல் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

குறைந்த எண்ணிக்கையில் ரசிகர்கள் வந்தாலும் ஏற் கெனவே வெளியான பழைய படங்கள் மீண்டும் திரையிடப் பட்டது.

3 புதிய திரைப்படங்கள்

இதுதொடர்பாக வேலூர், தி.மலை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலை வர் எஸ்.பிக்சர்ஸ் சீனிவாசன் கூறும் போது, ‘‘வி.பி.எப் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டு வருவதால் தீபாவளிக்கு 3 புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும் என்ற தகவல் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

அதேபோல், புதன்கிழமை (இன்று) முதல் அனைத்து திரையங் கிலும் படங்கள் வெளியிடப்பட உள்ளன. பழைய படங்கள் மீண்டும் திரையிடப்பட உள்ளதால் வரும் 13- ம் தேதி வரை டிக்கெட் விலை குறைக்கப்பட்டு ரூ.60, 70, 80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அருங்காட்சியகம் திறப்பு

வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக நேற்று முதல் திறக்கப்பட்டது. கோட்டையில் ஏற்கெனவே ஜலகண்டேஸ்வரர் கோயில் மட்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அருங்காட்சியகம் நேற்று முதல் திறக்கப்பட்டது.

பெரியவர்கள் மட்டும் அருங்காட்சியகத்தில் செல்ல அனு மதிக்கப்பட்டனர். அனைவரும் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் தேவை ஏற்பட்டால் ஆக்ஸி பல்ஸ் மீட்டர் மூலம் பரிசோதிக்கவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

வழக்கமான நாட்களில் 200 பேரும், வார இறுதி நாட்களில் 500 பேரும் வருவார்கள். நேற்றுமுதல் நாளில் பார்வை யாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் கடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்