விளைநிலம் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் தலைமையில் தொலைபேசி வழியாக நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு பிரச்சினைகளுக்காக 84 அழைப்புகள் வரப்பெற்றன. சிலர் நேரிலும் மனுக்கள் அளித்தனர்.
திருப்பூர் தெற்கு அவிநாசிபாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில், "எங்கள் ஊரில் சுமார் 200 விவசாய குடும்பங்கள் உள்ளன.திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விளைநிலத்தின் அருகே டாஸ்மாக் கடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாய பெண் தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இடத்தில் டாஸ்மாக் கடை அமைந்தால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும் பெண் தொழிலாளர்களும் பல்வேறு இடையூறை சந்திக்க நேரிடும். ஏற்கெனவே 2 கி.மீ. சுற்றளவில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன.பொதுமக்களின் நலன் கருதி புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago