குப்பைகள் அடைத்து தண்ணீர் வீணாவதால் பெரியாறு பாசனக் கால்வாயை சுத்தம் செய்யும் விவசாயிகள்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியாறு பாசனக் கால்வாயை பொதுப்பணித் துறையினர் சுத்தம் செய்யாததால், செடி, குப்பைகள் அடைத்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதையடுத்து அடைப்புகளை விவசாயிகள் சரி செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48-வது மடைக் கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 136 கண்மாய்களுக்கு உட்பட்ட 6,748 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதேபோல பெரியாறு விஸ்தரிப்பு, நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் 332 கண்மாய்களுக்கு உட்பட்ட 8 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில் செப்.27-ம் தேதி ஒருபோக பாசனத்துக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டத்துக்கு முறையாக தண்ணீர் திறக்கவில்லை. இதைக் கண்டித்து நவ.4-ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து ஷீல்டு கால்வாய், கட்டாணிப்பட்டி-1, கட்டாணிப்பட்டி-2 ஆகிய மூன்று கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசனக் கால்வாய்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாகச் சீரமைத்து பராமரிப்பதில்லை. இதனால் தண்ணீருடன் செடிகளும், குப்பைகளும் கலந்து வருகின்றன. அவை கண்மாய்களுக்குச் செல்லும் கால்வாயை அடைத்துக் கொள்வதால் தண்ணீர் வீணாகி வருகிறது. இதையடுத்து விவசாயிகளே களமிறங்கி குப்பைகளை அகற்றி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்