வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க சோலார் மின்வேலி ஐ.பெரியசாமி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

வன விலங்குகளிடம் இருந்து மலைப் பயிர்களைப் பாதுகாக்க சோலார் மின்வேலி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஐ.பெரியசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொடைக்கானல் மலைப் பகுதியில் பயிர்களை யானைகள் அதிக அளவில் சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக ஆத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, பெரும்பாறை, கே.சி.பட்டி, குப்பம்மாள்பட்டி, கவியக்காடு, காமனூர், படலங்காடு உள்ளிட்ட மலை கிராமங்கள் மற்றும் மலையடிவாரத்தில் உள்ள கோம்பை ஆகிய கிராமங்களின் விளைநிலங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை, எலுமிச்சை, சவ்சவ், மிளகு, உள்ளிட்ட பயிர்களை யானைகள் சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க சோலார் மின்வேலி அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் சோலார் மின்வேலி அமைத்து விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்