மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா

By செய்திப்பிரிவு

மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறி நேற்று கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் எதிரே மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு நேற்று சூளகிரி ஒன்றியம் கிருஷ்ணாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் (29) என்பவர் போலி பத்திரப்பதிவு குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண்கள் சிலரும், தர்ணா போராட்டத்தில் கலந்து கொண் டனர். அவர்கள் கூறும்போது, ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கூறினாலும், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால் மனுவுடன் ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் என அலைகழிக்கப்படுகின்றனர்.

ஒரு சிலர் தீர்வு கிடைக்காமலே இறந்தும் உள்ளதாக அவர்களின் வாரிசுகளும் அதே மனுக்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.தர்ணா போராட்டம் குறித்து தகவ லறிந்து வந்த டிஆர்ஓ., சாந்தி அங்கிருந்தவர்களிடம் மனுக்களை பெற்றார். உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, அவர்களை அனுப்பி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்