கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையத்தில் பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினரால் விபத்தில்லா தீபாவளி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக தீயணைப்பு வாகனம் மூலமாக ஒலிபெருக்கி மூலம் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி பொதுமக் களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தினர்.
நிலைய அலுவலர் செங்கோட்டுவேலு தலைமையில், தீயணைப்பு வீரர்கள் முகக்கவசம் அணிந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். இதே போல் போச்சம்பள்ளியில் நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப் பட்டன.
ஊத்தங்கரையில் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை ஊத்தங்கரை வட்டாட்சியர் தண்டபாணிதொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது விபத்து நேரிட்டால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தர வேண்டும். மேலும் தீ பரவாமலும் விபத்து அதிகரிக்காமலும் தடுக்க தீயணைப்பு துறையினர் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பதாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பட்டாசு கடை நடத்தும் உரிமை பெற்றவர்களும் அரசு வழங்கியுள்ள நிபந்தனைகள் படி கடையை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago