முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 300 பேர் கைது

By செய்திப்பிரிவு

தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்க வலியுறுத்தி, சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக கோட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகை செய்த போக்குவரத்து தொழிலாளர்கள் 300 பேரை போலீஸார் கைது செய்தனர்.

போராட்டத்துக்கு தொமுச பொதுச் செயலாளர் மணி தலைமை வகித்தார். சிஐடியு பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும். 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 15 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பண பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சார்ந்த 300 பேரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் கைது செய்து, அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஈரோடு

ஈரோடு அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு, 20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி, அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் சார்பில் போராட்டம் நடந்தது.

தருமபுரி

தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் எதிரே நேற்று, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது.இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்