கதண்டு கடித்ததில் தொழிலாளர்கள் 7 பேர் காயம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை அடுத்த கடுவெளி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளர்கள் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, முள்வேலியில் கூடுகட்டியிருந்த கதண்டுகள் கடித்ததில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த கடுவெளி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த அருணாசலம்(70), இளஞ்சியம்(45), சந்திரசேகர்(30), ரவி(35), பிரவீன்(27). முத்துக்கிருஷ்ணன்(45), மாரியம்மாள்(50) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. 7 பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்