உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவல் காரணமாக, தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. தற்போது இந்த நினைவு முற்றம் நவ.10-ம் தேதி (இன்று) முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும். வழக்கம்போல காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவதுடன், தொற்று நோய் தடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago