தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் குற்றங்களை தடுக்க போலீஸார் விழிப்புணர்வு

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முக்கிய கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் சூழலில், குற்றங்களை தடுக்க போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூர் மாநகரில் குமரன் சாலை, புது மார்க்கெட் வீதி, காமராஜர் சாலை உட்பட பிரதான கடை வீதிகள், தெருக்கள் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றன.

விழாக்கால கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், இதனை தடுக்க மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் முக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், திருடர்கள் ஜாக்கிரதை, பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும், அவசர உதவிக்கான காவல் நிலையங்களின் அழைப்பு எண்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் மாநகர பகுதிகளில் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளன.

பொருட்கள் திருட்டுப்போனால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்கவும் பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்