பால் உற்பத்தியாளர்களுக்கான ரூ.60 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க திமுக வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே பால் உற்பத்தியாளர் களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை, அவர் களுக்கு கிடைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியருக்குஅவர் அனுப்பியுள்ள கடிதத்தில்கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனத்தின் கீழ் செயல்படும்அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் கடந்தஜூன் 20-ம் தேதி வரை மட்டுமே பால் பணம் விநியோகம்செய்யப்பட்டுள்ளது, கடந்த சிலமாதங்களாக பால் பணம்விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் சிரமத்தில் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் சுமார்456 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. அவற்றின் கீழ் நாளொன்றுக்கு சுமார் 2.4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் சுமார் ஆயிரக்கணக்கான பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.60 கோடிக்கு மேல் உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி இதுதொடர்பாக தங்களுக்குகடிதம் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே பால் உற்பத்தியாளர்களுக்கு கொடுக்க வேண்டியநிலுவைத்தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்