கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவை சந்தித்துஅளித்த மனுவில், ‘‘தமிழகத்தில்உள்ளாட்சித்தேர்தல் முடிந்து, மக்கள்பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெறும்நிலையில் நீலகிரி மாவட்டத்தில்வளர்ச்சி மன்றக் குழு, மாவட்டதிட்டக்குழு போன்ற எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. உடனடியாக இக் குழுக்களை அமைக்க வேண்டும்.நீலகிரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 70 சதவீத பதவிகளில் திமுக, அதன் கூட்டணிகட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 30 சதவீத இடங்களில் சுயேச்சை பிரதிநிதிகளும், அதிமுகவினரும் வெற்றி பெற்றுள்ளனர்.திமுக பிரதிநிதிகளை அரசுவிழாக்களுக்கு முறையாக அழைப்பதில்லை. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago