திருமணி தடுப்பூசி தொழிற்சாலைக்குரூ.100 கோடி நிதி ஒதுக்க வேண்டும்சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருமணியில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலையை ரூ.100 கோடி நிதி ஒதுக்கி இயங்க வைக்க வேண்டும் என சிஐடியு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கை மாவட்டச் செயலர் இ.சங்கர் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம், திருமணியில் 2012-ல் 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட தடுப்பூசி தொழிற்சாலை செயல்படாமல் உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபம் சேர்க்கும் வகையில் அனைத்து உதவிகளையும் செய்துவரும் மத்திய அரசு, நம் இந்திய அரசு நிறுவனமான எச்எல்எல் நிறுவனத்தை புறக்கணிப்பதைக் கைவிடவேண்டும். தடுப்பூசி மருந்து தயாரிக்க தயார் நிலையில் இருக்கும் இந்நிறுவனத்தில் உற்பத்தியை தொடங்க, ரூ.100 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சிஐடியு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்